பெரிய இடத்து விஷயத்தில் தலையிடுவது ஆபத்தானது. சமுதாயத்தின் விஷப் பார்வை பெரிய இடம் - சிறிய இடம் பார்ப்பதில்லை. ஒழுக்கம், நாணயம் இவைகளில் யாரும் தவறிவிடுவது வழக்கந்தான். ஆனால் 'பெரிய இடம்'என்ற வார்த்தையால் எவ்வளவோ ஊழல்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அவை அம்பலத்திற்கு வந்தால்தான் சமுதாய இழிவுகள் துடைக்கப்பட ஒரு நல்ல மார்க்கம் ஏற்படும் என்பது துணிபு. எத்தனையோ பண்ணைகளில் படாடோபக்காரர் மாளிகைகளில், அழுகிப்போன செய்திகள் நாற்றமெடுத்தபிறகே, நாட்டினர்க்குத் தெரிகிறது. ஆனாலும், 'பெரிய இட